உள்ளூர் செய்திகள்

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு ராணுவ தலைமை தளபதி வருகை

குன்னூர்: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நமது நாட்டின் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே வருகை தந்து உரை நிகழ்த்தினார்.நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நம் நாடு மட்டுமின்றி வெளிநாட்டின் முப்படை அதிகாரிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நமது நாட்டின் உயர் அதிகாரிகள் அவ்வப்போது வந்து உரை நிகழ்த்தி செல்கின்றனர். தற்போது 79வது பயிற்சியில் 400க்கும் மேற்பட்ட முப்படை அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். இந்த குழுவிற்கான பயிற்சி வரும் 13ம் தேதி நிறைவு பெறுகிறது.இந்நிலையில் கல்லூரிக்கு ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே வருகை தந்தார். நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகள் முன்பு உரை நிகழ்த்தினார். தேசிய பாதுகாப்பு, ராணுவ சவால்கள், எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள் உட்பட பல்வேறு ராணுவ மேம்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் முன்னிலையில், அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.பிறகு, முன்னாள் ராணுவ துணை தளபதி லெப். ஜெனரல் பட்டாபிராமன் வீட்டிற்கு சென்று கலந்துரையாடினார். தொடர்ந்து ஜிம்கானா மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கோவை சூலூர் விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் திருப்பதி என்.சி.சி; யூனிட்டுக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்