உள்ளூர் செய்திகள்

சிலிக்கான் போட்டானிக் சாதனங்கள் ஆராய்ச்சி மலேஷிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னை: நவீன சிலிக்கான் போட்டானிக் சாதனங்கள் மற்றும் சர்க்கியூட்டுகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், மலேஷியாவின் சில்டெரா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., நிறுவனத்தின், சிலிக்கான் போட்டானிக்ஸ் உயர் சிறப்பு மையம், புரோகிராம் செய்யக்கூடிய, போட்டானிக் ஒருங்கிணைப்பு சுற்றுகள் மற்றும் அமைப்புகளுக்கான மையம் ஆகியவை, மலேஷியாவின், 'சில்டெரா' நிறுவனத்துடன் இணைந்து செயல்பட, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.ஒப்பந்தத்தில், ஐ.ஐ.டி., தொழில் துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி டீன் மனு சந்தானம், தலைமை ஆய்வாளர் பிஜோய் கிருஷ்ணதாஸ், மலேஷியா சில்டெரா நிறுவன தலைமை செயல் அலுவலர் ஆல்பர்ட் பாங் சூ கூன், தொழில்நுட்பத் துறை தலைவர் துங் பெங் ஜு ஆகியோர் கையெழுத்திட்டனர்.நவீன சிலிக்கான் போட்டானிக் சாதனங்கள் மற்றும் சர்க்யூட்டுகள் தொடர்பாக இணைந்து ஆராய்ச்சி செய்வது, இந்த கூட்டு முயற்சியின் முக்கிய அம்சமாகும். தரவு மையங்கள், உயர் செயல்திறன் மிகுந்த கணினிகள், அதிவேக இன்டர்கனெக்ட் தீர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறியதாவது:இந்த ஒப்பந்தம் வழியே குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. உயர் செயல்திறன் உடைய, சிலிக்கான் போட்டானிக்ஸ் தொழில்நுட்ப தீர்வுகளில், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான திறவுகோலாக அமைந்துள்ளது.அதிநவீன வர்த்தக செமிகண்டக்டர் பேப்ரிகேஷன் வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கி, பாரதம் முன்னேறும் நிலையில், ஆராய்ச்சி மற்றும் மனிதத்திறன் மேம்பாட்டு முயற்சிகளை, அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்கால தொழில்நுட்பங்களில், அதன் இலக்கை எட்ட, இந்த ஒத்துழைப்பு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்