உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவில் பேச்சு போட்டி; பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு

உடுமலை : தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில், அம்பேத்காரின் பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மாவட்ட அளவில் நடக்கிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் போட்டிகள், ஜூலை 9ம் தேதி நடக்கிறது.போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, மூவாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக இரண்டாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், அரசு பள்ளிகளில் இருந்து பங்கேற்கும் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா, இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.பள்ளி தலைமையாசிரியர்கள், அந்தந்த பள்ளி அளவில் மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும். கல்லுாரிகளில், மாணவர்களை போட்டிகள் நடத்தி தேர்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டிக்கான பட்டியல் அனுப்ப வேண்டும்.பள்ளி மாணவர்களுக்கு, சமூக தொண்டில் அம்பேத்கர், சுயமரியாதையும் அம்பேத்கரும், சட்டமேதை அம்பேத்கர் என்ற தலைப்புகளும், கல்லுாரி மாணவர்களுக்கு, அம்பேத்கரின் சீர்திருத்த சிந்தனைகள், அரசியலைப்பின் சிற்பி, அம்பேத்கர் கண்ட சமத்துவம் என்ற தலைப்புகளிலும் நடக்கிறது.பள்ளி மாணவர்களுக்கு காலையிலும், கல்லுாரி மாணவர்களுக்கு மதியமும் போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்