உள்ளூர் செய்திகள்

சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் சுனில்குமார்

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சுனில்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்யும் சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக, டி.ஜி.பி., சீமா அகர்வால் பணியாற்றி வந்தார்.இரு தினங்களுக்கு முன், சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சுனில்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, அரசு பிறப்பித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்