ராணுவ பேண்ட் இசை நிகழ்ச்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்காக ராணுவ பேண்ட் இசை நிகழ்ச்சி நடந்தது.குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில், 78 வது காலாட்படை தினத்தையொட்டி, பள்ளி மாணவ. மாணவியருக்கு ராணுவத்தில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராணுவ பேண்ட் இசை நிகழ்ச்சி நடந்தது.அதில், நாட்டுபற்று பாடல்களை இசைத்தவாறு, ராணுவ வீரர்கள் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.தொடர்ந்து, ராணுவம் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் சிறப்புகள் குறித்து ராணுவ பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.