உள்ளூர் செய்திகள்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்றவர்கள் சான்றிதழ் பெற அழைப்பு

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று கடந்த ஜூலை 2014 ஆம் ஆண்டு வரை தேர்ச்சியடைந்த பயிற்சியாளர்கள், தங்களது அசல் தேசிய தொழிற் சான்றிதழ்களை இதுவரை பெறாமல் இருந்தால் பெற்றுக்கொள்ளலாம்.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று கடந்த ஜூலை 2014 ஆம் ஆண்டு வரை தேர்ச்சியடைந்த பயிற்சியாளர்கள், இதுவரை சான்றிதழ் பெறாமல் இருப்பின், உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்துக்கு உரியஅடையாள அட்டை மற்றும் அசல் புரவிஷனல் டிரேட் சான்றிதழுடன், அலுவலக வேலை நாட்களில் பகல் 2:00 முதல் 5:00 மணி வரை நேரில் வந்து, மூன்று மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம். தவறும்பட்சத்தில் சான்றிதழ்கள், தலைமை அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பப்படும்.மேலும் விபரங்களுக்கு, 0422 - 2642041, 88385 83094 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்