உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆசிரியை மீது மாணவர்கள் புகார்

கோவை: கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார்.* பீளமேடு செங்காளியப்பன் நகர் மக்கள் கவுன்சிலர் சித்ரா அளித்த மனுவில்,- 26வது வார்டுக்குட்பட்ட பீளமேடு பகுதியில், குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி மையங்கள் இல்லை. அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தார்.*ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள்அளித்த மனுவில், ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், எங்களுக்கு சரியாக பாடம் எடுப்பதில்லை. அந்த ஆசிரியை ஆய்வகத்துக்கு அழைத்து செல்வதில்லை. எங்களது கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்