உள்ளூர் செய்திகள்

நான் முதல்வன் திட்டத்தில் வங்கி பணியாளராக தேர்ச்சி பெற்ற மாணவி

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே அத்தனுார் டவுன் பஞ்., 7-வது கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன், 59. விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, 49. இவர்களுக்கு நவீன் குமார், 26, என்ற மகன், கமலி, 22, என்ற மகள் உள்ளனர். கமலி பள்ளி படிப்பை தனியார் பள்ளியில்முடித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில் கணித பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக, தனியார் பயிற்சி நிறுவனத்தில், இவர் வங்கி தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சேலத்தில் பயிற்சியும் பெற்று வந்-துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வில் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளார்.இதுகுறித்து மாணவி கமலி கூறுகையில்,''தனியார் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா பயிற்சி திட்டத்தில் பயின்று, பாரத ஸ்டேட் வங்கியில் பணியாளராக தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்