உள்ளூர் செய்திகள்

ஹிந்தி எதிர்ப்பு போரில் ஈ.வெ.ரா., பித்தலாட்டம் என்ற நுால் பறிமுதல்

சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் 'ஹிந்தி எதிர்ப்பு போரில் ஈ.வெ.ரா., பித்தலாட்டம்' என்ற நுால், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில், ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிரான முதல் போராட்டத்தை, 1938ல் முன்னெடுத்தவர் ஈழத்து சிவானந்த அடிகள்.இவர், 1965ம் ஆண்டு, 'ஹிந்தி எதிர்ப்பு போரில் திராவிட பித்தலாட்டம்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஆரம்பத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிரான மன நிலையில் இருந்து, தன் கருத்துகளை வெளியிட்டவர் ஈ.வெ.ராமசாமி.பின்னர், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான போராட்டமாக, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மாற்றி புகழ் அடைந்தார்.முதல்வர் பதவியில் இருந்து ராஜாஜி பதவி விலகியதும், போராட்டத்தை நிறுத்தும்படி அறிக்கை விட்டதுடன், போராடியவர்களை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதை ஈழத்து சிவானந்த அடிகள், தன் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், திராவிட கட்சியினரின் புரட்டு வாதங்களையும், தன் நுாலில் பதிவு செய்துள்ளார்.இந்த நுால், 'ஹிந்தி எதிர்ப்பு போரில் ஈ.வெ.ரா., பித்தலாட்டம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம், சென்னை புத்தகக்காட்சியில், தமிழம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.இதை சர்ச்சையாக்கிய ஆளுங்கட்சியினர், போலீஸ் வாயிலாக அழுத்தம் தந்து, புத்தகக்காட்சி துவங்கியதும், தமிழம் பதிப்பக அரங்கிற்கு சென்று, அனைத்து நுால்களையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்