பூஜ்ய ஆற்றல் குளிர்சாதன அறை வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்
சூலூர்: தமிழ்நாடு வேளாண் பல்கலை இளங்கலை 4ம் ஆண்டு மாணவிகள், சுல்தான்பேட்டையில் தங்கி, கிராம தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம் எனும் பாடத்துக்காக , வேளாண் பணிகள் குறித்து கற்று வருகின்றனர். பயிர் மற்றும் உர மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர்.மேட்டு லட்சுமி நாயக்கன்பாளையத்தில், பூஜ்ய ஆற்றல் குளிர்சாதன அறை அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.குளிர்சாதன அறையை உள்ளூரில் கிடைக்கும் செங்கல், மணலை கொண்டு உருவாக்க வேண்டும். குறைந்த செலவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, இந்த குளிர் சாதன அறையில், பழங்கள், காய்கறிகளை பல நாட்கள் சேமித்து வைக்கலாம். காய்கறிகளின் கெட்டுப்போகும் தன்மை குறையும். மின்சாரம் தேவையில்லை, என, மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.ஸ்ரீ அம்பாள் தென்னை நாற்று பண்ணையை பார்வையிட்டு, தென்னை வளர்ப்பு, தென்னையில் கலப்பேற்ற முறைகள் குறித்து தென்னை விவசாயி கார்மேகத்திடம் கேட்டறிந்தனர்.