உள்ளூர் செய்திகள்

போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்க சம்மர் கேம்ப் சிறந்த தேர்வு

கோவை: பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு. சில நாட்களுக்கு விடுமுறையை கொண்டாடி குதுாகலிக்கும் குழந்தைகள் சீக்கிரமே 'எனக்கு போரடிக்கிறது' என பெற்றோரிடம் முறையிடுவார்கள்.விடுமுறையில் அவர்களை பிசியாக வைத்திருப்பதுடன், புதிய திறன்களை கற்றுக்கொடுக்க கோடை முகாம்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்கிறார் உளவியல் ஆலோசகர் விமலா ராணி.அவர் கூறியதாவது:சம்மர் கேம்பை தேர்ந்தெடுக்கும் முன் முதலில் குழந்தைகளின் விருப்பத்தை தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்த, அவர்களுக்கு எதில் அதிக ஆர்வமும் உள்ளதா அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பலாம்.கட்டணம் அதிகமான முகாம் பாதுகாப்பானது மற்றும் சிறந்தது என்ற மாயை நம்ப வேண்டாம். முகாம் நடத்தும் நிறுவனம் நம்பகமானதா, பயிற்றுநர்கள் அனுபவமுள்ளவர்களா என்பதை சரிபார்க்க வேண்டும்.குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவசர நிலைகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.ஒரு மாதத்திற்கு ஒரே பயிற்சி முகாம், நீண்ட நேரம் குழந்தைகளை ஈடுபடுத்தும் முகாம்கள் குழந்தைகளுக்கு சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்தும்.குடும்பமாக சுற்றுலா, சொந்த ஊர் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது போன்றவையும் லிஸ்டில் இருக்கட்டும்.டிஜிட்டல் தாக்கத்தால் குழந்தைகள் குறைந்த சமூக தொடர்புடையவர்களாக இருக்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. சம்மர் கேம்ப்கள் மொபைல், சமூக ஊடகங்களில் குழந்தைகள் மூழ்கிப்போவதை தடுக்கும்.புதியவர்களுடன் பழக சிறந்த வாய்ப்பாக இருக்கும். கற்றலை தாண்டி புதிய திறன்களை கற்றுக்கொள்வார்கள். இது குழந்தைகள் சுதந்திரமாக சிந்திக்கவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்