தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை 30ம் தேதி நிறைவு
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை. தொலை தூர கல்வியில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.சி.ஏ (2ம் ஆண்டு சேர்க்கை), பி.சி.ஏ, பி.சி.ஏ (2ம் ஆண்டு சேர்க்கை), எம்.எஸ்சி (உளவியல், கணிதம்), பி.ஜி.டி.சி.ஏ, பத்திரிக்கையியல் பட்டய படிப்பு உட்பட அனைத்து பட்ட, பட்ட மேற்படிப்புகளுக்கு இந்த 2009-10ம் காலண்டர் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்குள் அட்மிஷன் செய்பவர்கள் வரும் மே மாதம் தேர்வு எழுதலாம்.எம்.பி.ஏ மேலாண்மை படிப்பு 2 ஆண்டுகளாகும்.நுழைவு தேர்வு கிடையாது. பட்ட படிப்பில் பி.எஸ்சி கம்ப்யூட்டர், பி.சி.ஏ அல்லது பி.ஜி.டி.சி.ஏ படித்திருந்தால் எம்.சி.ஏ 2ம் ஆண்டு நேரடியாக சேர்ந்து 2 ஆண்டுகளுக்குள் எம்.சி.ஏ பட்டம் பெறலாம். ஏதாவது ஒரு டிப்ளமோ படித்தவர்கள் பி.சி.ஏ 2ம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து 2 ஆண்டுகளில் பட்டம் பெறலாம்.மேலும், பிளஸ் 2 தேர்ச்சி/டிப்ளமோ மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் எந்த அடிப்படை கல்வி தகுதி இல்லாமல் பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ ஆகிய அனைத்து பட்ட படிப்புகளிலும் நேரடியாக கல்வி மையத்தில் சேர்ந்து படிக்கலாம்.நெல்லையிலேயே பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படும். பி.சி.ஏ, எம்.சி.ஏக்கான செய்முறை வகுப்புகள் கல்வி மைய கம்ப்யூட்டர் லேப்பில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்தப்படும்.இந்த படிப்புகளுக்கு அட்மிஷன் மற்றும் மேலும் விபரங்களுக்கு பாளை ஐகிரவுண்ட் ரோட்டில் உள்ள திறந்த நிலை பல்கலை கழக கல்வி மையத்தை (போன் - 0462 2572412, 93667 14937) அணுகலாம்.திறந்த நிலை பல்கலை. படிப்புகளை வழங்க தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரே பல்கலையான தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை. படிப்புகள் யு.சி.ஜி, டி.இ.சி, என்.சி.டி, ஏ.ஐ.யு, ஏ.ஏ.ஓ.யு, ஐ.சி.டி.இ ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றது.திறந்த நிலை பல்கலை. படிப்புகள் அரசு மற்றும் பொது வேலைவாய்ப்புக்கு ஏற்புடையதாகும் என்று கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.