உள்ளூர் செய்திகள்

தாமதமாக வரும் மாணவர்களை ‘முட்டி’ போட வைக்கும் கொடுமை

பள்ளி மாணவ, மாணவிகளை சக மாணவர் எதிரே முட்டிபோட வைத்து ஆசிரியர்கள் தண்டனை வழங்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளை முட்டி போட வைக்கும் கொடுமை நடந்தேறி வருகிறது. இப்பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை  900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை 7 மணி முதல் 8.30 மணி வரை தனி சிறப்பு வகுப்பு நடக்கிறது. ஒரு சிலர் மட்டும் காலை உணவு, மதிய உணவு எடுத்து வந்து விடுகின்றனர். பிளஸ் 2 டியூசன் முடித்து வரும் மாணவ, மாணவிகளும், சிறப்பு வகுப்பில் படித்தவர்களும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாமல் போகிறது. ஐந்து முதல் 10 நிமிடம் வரை தாமதமாக வரும் மாணவ, மாணவிகளை உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. அவர்களை ஆசிரியர்கள் முட்டி போட வைத்து தண்டனை வழங்குகின்றனர். அதன் பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்