உள்ளூர் செய்திகள்

கிராமப்புற மாணவர்களிடைய விழிப்புணர்வு: நடமாடும் அருங்காட்சியகம் நகர்வது எப்போது?

நாட்டின், பல்வேறு பொக்கிஷங்கள், இங்கு, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரிய தபால் தலைகள், காசுகள், பட்டயங்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், "நடமாடும் அருங்காட்சியகம்" அமைக்க, அருங்காட்சியகங்கள் துறை முடிவு செய்தது. அதன்படி, பஸ்சின் உள் பகுதியை, காட்சி கூடமாக்கி, பஸ்சின் இரண்டு புறங்களிலும், காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்கள் குறித்த அறிவிப்பு, சுவரொட்டிகளில் ஒட்டப்படும். பின், அருங்காட்சியகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள முக்கியமான பொருட்கள், காட்சிக்கு வைக்கப்படும். ஒரே நேரத்தில், 50க்கும் மேற்பட்டவர் பார்வையிடும் வகையில், இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ளவர்களிடம் அருங்காட்சியகங்கள் குறித்தும், பாரம்பரியத்தின் மதிப்பு குறித்தும், அந்தந்த பகுதிகளில் உள்ள, காப்பாட்சியர் விளக்கும் வகையில், திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு, இத்திட்டத்தைத் துவக்க, வேலை ஆரம்பமானது. இந்த ஆண்டு மே மாதத்துக்குள், அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. பஸ் தயாராகி, ஒரு மாதத்துக்கும் மேல் ஆகி விட்டது. ஆனால், அதில், காட்சிப் பொருட்களை அமைக்கும் பணி, இன்னும் துவங்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்