உள்ளூர் செய்திகள்

வாசிப்பு திறன் மேம்படுத்தும் முயற்சி: மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

பந்தலூர்: நூலகங்களில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் வாசிப்பு திறன் மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக புத்தக தினத்தை முன்னிட்டு புரவலர்கள் சேர்த்தல், பள்ளி மாணவர்களிடையே வா­சிப்பு திறனை மேம்படுத்துதல், வாசகர் எண்ணிக்கை அதிகரித்து போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்­ சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்­ந்து, தற்போது பந்தலூர் நூலகம் சார்பில், "பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 200 மாணவர்கள், தேவாலா ஜி.டி.­ஆர். பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள், புனித சேவியர் ஆரம்ப பள்ளியை சேர்ந்த 100 மாணவர்கள்" என, முதல்கட்டமாக மொத்தம் 450 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மாணவர்களை வாரம் ஒருநாள் நூலகத்திற்கு வரவழைத்தும், பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துசென்றும் வாசிப்பு திறனை மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், நூலகர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்