உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் தின விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

தேனி: இம்மாதம் 14 ம் தேதி குழந்தைகள் தின விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தின விழா நவ.,14 ல் கொண்டாடப்படுகிறது. அன்று அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்பு மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் கண்டிப்பாக நடத்த வேண்டும். அவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குனர் ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்