உள்ளூர் செய்திகள்

காலநிலை மாற்றத்துக்கு கிரீன் ஹைட்ரஜன் ஒரு சிறந்த தீர்வு

காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் பெரிதாக உள்ளது, மேலும் டி -கார்பனைசேஷனை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவை உள்ளது. கூடுதலாக நெட் ஜீரோ எமிஷன் அடைய 2030ம் ஆண்டில் ஹைட்ரஜன் தொழில்நுட்ப வரிசைப்படுத்தலுக்கான முதலீடு பல லட்சம் கோடி டாலர்கள் முதலீடுகள் செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பாசில் ப்யூயல்ஸ் வாயிலாக உலகம் 9,40,00,000 டன் ஹைட்ரஜனை உற்பத்தி செய்கிறது இதன் விளைவாக 90,00,00,000 டன் கார்பன்-டை - ஆக்சைடு வெளியேற்றம் ஏற்படுகிறது.நாமெல்லாம் ஹைட்ரஜன் இல்லாமல் வாழ முடியாது ஏனெனில் இது எண்ணெய், எக்கு, உணவு மற்றும் உரத்தொழிலில் இன்றியமையாதது. இருப்பினும் இந்த கார்பன்-டை- ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க ஒரு வழி உள்ளது.சமீபத்திய ஒரு செய்தியையும் நாம் இந்த நேரத்தில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கிரீன் ஹைட்ரஜனில் முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ், ஜன., 7ம் தேதி தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளது. இது புதுப்பிக்கதக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜனின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.ஸ்டார்ட் அப் பங்கு என்னசெலவு குறைந்த மற்றும் நிலையான ஹைட்ரஜனின் உற்பத்தி, நாட்டுக்கு இப்போது முக்கியமான தேவைகளில் ஒன்று. இதனை செயல்படுத்துவதில் பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் ஈடுபட்டிருந்தாலும், செலவு குறைந்த கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதில் நியூட்ரேஸ் என்ற ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி முக்கிய பங்கு வகிக்கிறது.2021ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், விரைவாக வளர்ந்து வருகிறது. சுத்திகரிப்பு நிலையங்கள், பெர்டிலைசர்ஸ், ரசாயனங்கள், எக்கு மற்றும் சிமென்ட் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் இந்நிறுவன எலக்ட்ரோலைசர்களைப் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. கிரீன் ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியாவை நீண்ட கால சேமித்து வைப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் அதன் தீர்வை விரிவுபடுத்த இப்போது அது எதிர்பார்க்கிறது.கிரீன் ஹைட்ரஜன் உற்பத்திஇந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து கிரீன் ஹைட்ரஜனை உருவாக்கப் பயன்படும் புதிய வகை எலக்ட்ரோலைசரை உருவாக்கி வருகிறது. இது குறைந்த செலவு மற்றும் அதிக செயல்திறன் கொண்டவை ஆக இருக்கும். மேலும், தற்போதைய வணிக அமைப்புகளை விட ஐந்து மடங்கு மலிவானவை.இந்த ஸ்டார்ட் அப், பசுமையான ஹைட்ரஜன் உற்பத்திக்கான செலவை, 60 சதவீதத்துக்கும் அதிகமாக குறைக்கும் நோக்கில் புதுமையான எலக்ட்ரோலைசர்களை உருவாக்கி உற்பத்தி செய்கிறது. 2027ம் ஆண்டுக்குள் கிரீன் ஹைட்ரஜன் ஒரு கிலோகிராமுக்கு ஒரு டாலர் அளவுக்கு விலை குறைக்க இலக்கு வைத்துள்ளனர். அதிகளவில், ஆயில் இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கு இது ஒரு நல்ல செய்தி.இணையதளம் www.newtrace.ioசந்தேகங்களுக்கு இ-மெயில் Sethuraman.sathappan@gmail.comஅலைபேசி எண் 98204 51259 இணையதளம் www.startupand businessnews.com- சேதுராமன் சாத்தப்பன் 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்