உள்ளூர் செய்திகள்

கவர்னர் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் அட்டென்டன்ஸ்: அண்ணா பல்கலை.,யில் சர்ச்சை

சென்னை: அண்ணா பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்க உள்ளதால், அதில் பங்கேற்கும் மாணவர்களுக்கே வருகைப்பதிவு செய்யப்படும் என பல்கலை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதால் சர்ச்சையாகியுள்ளது.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.,23) நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் பார்வையாளர்களாக அண்ணா பல்கலை மாணவர்கள் பங்கேற்க சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. அதில், கவர்னர் விழாவில் அதிக மாணவர்களை பங்கேற்க செய்யும் வகையில் 3ம், 4ம் ஆண்டு மாணவர்களுக்கு விழா அரங்கிலேயே வருகைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. அதாவது விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமே வருகை பதிவு செய்யப்படும் என குறிப்பிட்டிருப்பதால் சர்ச்சையாகியுள்ளது.துணை வேந்தர் விளக்கம்இது குறித்து அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறுகையில், வருகைப்பதிவு என சொன்னால்தான் மாணவர்கள் பங்கேற்பார்கள்; இலலையெனில் வெளியில் சென்றுவிடுவர். மாணவர்கள் நாட்டுப்பற்றை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது என விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்