உள்ளூர் செய்திகள்

இஸ்லாமியா பல்கலையில் போராட்டம்: புகார் செய்யாததால் நடவடிக்கை இல்லை

புதுடில்லி: ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையின் சில மாணவர்கள் போராட்டம் நடத்த முயற்சிப்பது போன்று, சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ குறித்து, புகார் யாரும் தராததால் நடவடிக்கை எடுக்க முடியாது என டில்லி போலீசார் கூறினர்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இந்த விழா நாடு முழுதுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஹிந்துக்கள் கொண்டாடினர்.இந்நிலையில், டில்லி ஜாமியா மிலியா பல்கலை வளாகத்தில் சில மாணவர்கள் திரண்டு நின்று கோஷமிட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியிருந்தனர். பல்கலையின் பாதுகாவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர்.இந்தக் காட்சிகளை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது, வேகமாகப் பரவியது. இதனால் ஏராளமானோர் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, &'ஜாமியா மிலியா பல்கலை வளாகத்துக்குள் லுபாபிப் பஷீர் என்பவர் தலைமையில் இயங்கும் சகோதரத்துவ இயக்கம் நேற்று முன் தினம் போராட்டம் நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.ஆனால், பல்கலை நிர்வாகம் புகார் செய்யவில்லை. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளாகத்துக்கு வெளியே போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அதிகாரி, இந்தப் போராட்டத்தால் கல்விப் பணிகள் பாதிக்கப்படவில்லை. மூன்று மாணவர்கள் தான் கோஷம் எழுப்பினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வகுப்புகளும் தேர்வுகளும் எந்த இடையூறும் இல்லாமல் நடந்தன&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்