உள்ளூர் செய்திகள்

குண்டு பல்பு உட்பகுதியில் தேசிய சின்னங்களை வரைந்த ஓவியர்

ஆத்துார்: தலைவாசல் அருகே வேப்பநத்தத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 31. அரசு ஓவியக்கல்லுாரியில் படித்த இவர், கோவில்களில் சிற்ப வடிவமைப்பு, ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.குடியரசு தினத்தையொட்டி நேற்று, அவர் படித்த வேப்பநத்தம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அவரது ஓவியங்களை காட்சிப்படுத்தினார். அதற்கு, ஜனவரி 26ஐ குறிப்பிடும்படி, 26 குண்டு பல்புகளின் உட்பகுதிகளில் மத ஒற்றுமை, தேசிய, மாநில சின்னங்களை வரைந்து காட்சிப்படுத்தி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஓவியங்களை பார்த்த மாணவர்கள், கிருஷ்ணமூர்த்தியை பாராட்டினர்.இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: சுதந்திர தின விழாவில், 5 குண்டு பல்புகளுக்குள் தேசியக்கொடி, புலி, மயில், தாமரை என, வரைந்தேன். அப்போது சில பல்புகள் உடைந்தன. அதன் கண்ணாடிகள் கையை கிழித்தன. தற்போது குடியரசு தின விழாவில், 26 குண்டு பல்புகளில் தேசிய, மாநில சின்னங்கள் வரையும் பணியில், 10 நாட்களாக ஈடுபட்டேன்.அதன்படி இந்திய வரைபடம், அசோக சின்னம், காந்தி உருவம், தேசிய, மாநில சின்னங்களான தாமரை, மயில், புலி, ஆலமரம், மா, பலா, கங்கை நதி உள்ளிட்டவற்றை வரைந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்