உள்ளூர் செய்திகள்

கோடை விடுமுறையிலும் மதிய உணவு; பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

பெங்களூரு: வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகாக்களின் பள்ளிகளில், கோடை விடுமுறையின்போது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும்படி, கர்நாடக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு:மத்திய அரசின் உத்தரவுபடி, கர்நாடகாவில் வறட்சி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு அறிக்கையின்படி, 31 மாவட்டங்களின், 223 தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.வறட்சி பாதிப்பு தாலுகாக்களில் உள்ள, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறை நாட்களில் மதிய உணவு வழங்க வேண்டும்.ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 41 நாட்கள் கோடை விடுமுறை உள்ளது. இந்த நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும், மதிய உணவு வழங்க வேண்டும்.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, மதிய உணவு பெற விரும்பும் மாணவர்களின் பட்டியலை, கல்வி அதிகாரிகள் தயாரிக்க வேண்டும். இவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பேற வேண்டும்.அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், தாங்கள் சேகரித்த மாணவர்களின் தகவல்களை, பிப்ரவரி 3ம் தேதிக்குள் m2mdmskarnataka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்