அரசு கல்லுாரியில் சாய்தள வசதியின்றி மாற்றுத்திறனாளி மாணவிகள் அவதி
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இக்கல்லுாரியில் சிவகங்கை மட்டுமின்றி மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம், மதகுபட்டி, இடையமேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாணவிகள் வருகை தருகின்றனர்.இங்கு 11 பேராசிரியர்கள், 83 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் மாற்றுத்திறனாளி பேராசிரியர்களும் மாணவிகளும் வருகை தருகின்றனர். இவர்கள் வகுப்பறைக்கு செல்ல சாய்தள வசதி இல்லை.மாற்றுத்திறனாளி மாணவிகள் கூறுகையில், மகளிர் கல்லுாரியில் 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவிகள் படிக்கின்றனர். 5க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் வகுப்பறைக்கு செல்ல சாய்தள வசதி கிடையாது. வகுப்பறைக்கு செல்வதே சிரமமாக உள்ளது.