உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வுக்கான சிறப்பு ஆலோசனை தயாராக இருக்க அலுவலர்களுக்கு அறிவுரை

உடுமலை: உடுமலை கோட்டத்தில், 18 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்குகிறது. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளத்தில், 18 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்களுக்கான முதன்மையான கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுகோப்பு அறை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட அளவில், பொதுத்தேர்வு பொறுப்பு அலுவலர்களுக்கான சிறப்பு கூட்டம் நடந்தது. தேர்வறை மையங்களுக்கு, மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வருவதை தவிர்த்தல், அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு தாமதமில்லாமல் வருவது உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில், கூடுதலாக தனித்தேர்வர்களுக்கான மையங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கு குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். அந்தந்த பகுதிகளில் உள்ள தனித்தேர்வர்கள், அருகிலுள்ள சிறப்பு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.நடப்பாண்டில், அவ்வாறு சிறப்பு மையங்கள் அமைக்கப்படவில்லை. மொத்தமுள்ள, 18 மையங்களில் தான் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் முன்பு படித்த பள்ளி அல்லது அருகிலுள்ள பள்ளி தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன.தேர்வுக்கான ஆயத்த பணிகளை, உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்