உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு

போர்ட் லூயிஸ்: ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மொரீஷியஸ் பல்கலை.,யில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் அரசு முறைப்பயணமாக நேற்று மொரீஷியஸ் சென்றடைந்தார். மொரீஷியஸ் நாட்டில் இன்று(மார்ச் 12) தேசிய தினா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மொரீஷியஸ் பல்கலை.,யில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் இந்த அரசுமுறை பயணம் இந்தியாவிற்கும் மொரீஷியசுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்