உள்ளூர் செய்திகள்

பயனாளி வீடு சென்று உதவி: பார்வையற்ற அதிகாரி அசத்தல்

பெரம்பலுார்: நடக்க முடியாமல் வீட்டில் முடங்கிய மாற்றுத்திறனாளிக்கு, வீடு தேடி சென்று, நலத்திட்ட உதவி வழங்கிய பார்வையற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சப் -கலெக்டர் கோகுலின் செயல், அவரது குடும்பத்தினரை நெகிழ்வடைய செய்தது.பெரம்பலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கடந்த 29ம் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம், பார்வையற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சப்-கலெக்டர் கோகுல் தலைமையில் நடந்தது. முகாமில், வரகூர் கிராமத்தின் ஜெயந்தி என்பவர் பங்கேற்று, நடக்க முடியாமல் இருக்கும் தன் கணவர் ஆனந்தனுக்கு மருத்துவ உதவி செய்யுமாறு மனு கொடுத்தார்.உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், வரகூர் கிராமத்துக்கு சென்ற சப் -- கலெக்டர் கோகுல், மருத்துவ குழுவினருடன் மனுதாரரின் வீட்டுக்கே சென்றார். கோகுல் முன்னிலையில், அரசு டாக்டர் நோயாளியை பரிசோதித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கினார்.இதேபோல, இதே ஊரை சார்ந்த இருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதனால், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்