உள்ளூர் செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்; இரு மாணவர்கள் காயம்

சூலுார்: சூலுார் அருகே பள்ளத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில், இரு மாணவர்கள் காயமடைந்தனர்.சூலுார் அருகே செயல்படும் தனியார் பள்ளியின் வேன் நேற்று காலை பீடம் பள்ளி, பட்டணம் பகுதியில், நான்கு மாணவ, மாணவியரை ஏற்றி கொண்டு, நாகமநாயக்கன்பாளையம் நோக்கி சென்றது. பாப்பம்பட்டியை சேர்ந்த கார்த்திக்,27 வேனை ஓட்டி சென்றார்.ஜே.ஜே. நகர் பகுதியில் வேன் சென்ற போது, எதிரில் வந்த இரு சக்கர வாகனத்துக்கு வழி விட, வேனை வலது புறமாக டிரைவர் திருப்பி உள்ளார். அப்போது, ரோட்டின் பக்கவாட்டில் உள்ள மண் சரிந்ததால், ஏழு அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், மாணவர்கள் சஞ்சித், திவ்ய ஸ்ரீ ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.நான்கு மாணவர்கள் மட்டும் இருந்ததால், அசம்பாவிதம் பெரிய அளவில் இல்லை. டிரைவர் கார்த்திக் மீது எஸ்.ஐ., விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்