உள்ளூர் செய்திகள்

தாளூர் கல்லுாரியில் ராகிங் மாணவர்கள் மீது வழக்கு பதிவு

பந்தலுார்: பந்தலுார் அருகே, தாளூரில் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கும், 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே ராகிங் பிரச்னை ஏற்பட்டு மோதல் உருவானது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கேரளா மாநிலம் வடகரை என்ற இடத்தைச் சேர்ந்த, முதலாமாண்டு மாணவரை, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில், அவர் படுகாயமடைந்தார்.இது குறித்து அளிக்கப்பட்ட புகாரையடுத்து எருமாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்