இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஆதார் குறித்த பயிற்சி
ராமநாதபுரம் : இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களில் மாநில மையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆதார் உள்ளீடு பயிற்சி நடந்தது.இரு நாட்கள் நடந்த பயிற்சி நிறைவில் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்கியாரஜ் தலைமையேற்று ஆதார் உள்ளீடு உபகரணங்களை வழங்கினார். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லியோன் வரவேற்றார். பணியின் முக்கியத்துவம் குறித்து உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் பேசினார்.பள்ளி முதல்வர் சேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், பாலமுருகன், தினசேகர், உமா ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சியை எல்காட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியநாதன் நடத்தினார். பயிற்சி தன்னார்வலர்களுக்கு ஆதார் பதிவேற்றம் செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் அனைவருக்கும் மடிக் கணினி, ஆதார் எடுப்பதற்கு பயோ மெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் கோடை விடுமுறையில் விடுபட்ட மாணவர்களுக்கு முகாம் நடத்தி ஆதார் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சியில் தன்னார்வலர்கள் மண்டபம் விஜயலட்சுமி, கமுதி அபிநயா, பரமக்குடி மாலா, நயினார்கோவில் சரண்யா, ஆர்.எஸ்.மங்கலம் நஸ்ரின், ராமநாதபுரம் ராஜபிரியா கலந்து கொண்டனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.