உள்ளூர் செய்திகள்

நெல்லை சித்த மருத்துவ கல்லுாரியில் குழந்தைகள் வார்டு பளீச்

திருநெல்வேலி: நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரி குழந்தைகள் வார்டு, வண்ண ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லுாரியில் குழந்தை மருத்துவத்துறை சார்பில் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகள் வார்டுகளில் படுக்கைகள் பழுதடைந்த நிலையில் இருந்தன.இந்த படுக்கைகளை புதுப்பிக்க கல்லுாரி நிர்வாகம் முடிவு செய்தது. தொடர்ந்து படுக்கைககள், விரிப்புகள் புதுப்பிக்கப்பட்டன. வார்டு கட்டடங்களில் தேசமடைந்த பகுதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.சிகிச்சை பெறும் குழந்தைகள், வீடு மற்றும் பள்ளிகளில் இருப்பதை போல் உணரும் வகையில், சுவர்களில் வண்ணமயமான விளையாட்டு பொம்மை படங்கள், இயற்கை காட்சிகள் உள்ளிட்டவை வரையப்பட்டுள்ளன.இதுதவிர தமிழ், ஆங்கில எழுத்துக்கள், கணிதம் தொடர்பான பாடங்கள் விபரம், சிறிய கரும்பலகை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் வார்டை முதல்வர் மலர்விழி திறந்து வைத்தார். துணை முதல்வர் கோமளவல்லி, டாக்டர்கள் அன்புமலர், சியமளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு பருத்திப்பால், சத்துமாவு உருண்டை வழங்கப்பட்டன.துறைத்தலைவர் கீதா தேவி கூறுகையில், சிகிச்சை பெறும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் இருக்கிறோம் என்ற பயத்தில் இருக்கும். இந்த பயத்தை போக்கவே இதுபோன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் மனநிலை மாறும். விரைவில் குணமடையும் நிலையும் ஏற்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்