உள்ளூர் செய்திகள்

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 2024-25 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் 2024 ஜூன் 15ஆம் தேதி வெளியிட்டது. விண்ணப்பங்கள் 2024 ஜூன் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்பட்டு அன்றே தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. எந்த நுழைவுத் தேர்வையும் நடத்தாமல் ஜேஇஇ மெயின் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களை இணைத்து அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் நடத்துகிறது. முதல் பிரிவில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஷ்யாம் சுகேஷ் முதலிடமும், ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இரண்டாம் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த கோபிகா முதலிடமும், வாரங்கல்லைச் சேர்ந்த பலரோனித் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.ஜம்மு & காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சாஸ்த்ராவில் சேரும் மாணவர்களுக்கு 100% கல்வி உதவித் தொகை இலவச உறைவிட மற்றும் தங்கும் வசதியுடன் வழங்கப்படும்விரிவான தரவரிசை பட்டியல்கள் www.sastra.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி அடிப்படையிலான வெளிப்படையான மாணவர் சேர்க்கை இணையவழி மூலம் ஜூன் 15, 2024 முதல் நடைபெற உள்ளது. ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு & இமயமலை மாநிலங்கள் மற்றும் அந்தமான் ஆகிய மாநில மாணவர்களுக்கு சேர்க்கையில் தனிச்சலுகை வழங்கப்படும். தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்