உள்ளூர் செய்திகள்

மறுதேர்வு எழுத தேர்வர்களுக்கு விழிப்புணர்வு; ஆசிரியர்கள் நடவடிக்கை

உடுமலை : பொதுத்தேர்வு எழுதாத, தேர்ச்சி பெறாத தேர்வர்களை ஊக்குவித்து தேர்வு எழுத ஆசிரியர்கள் தயார்படுத்துகின்றனர்.மாநில அரசின் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ், இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கல்வி மட்டுமின்றி, உயர்கல்வி படிப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மேல்நிலை வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வி குறித்து முழுமையாக வழிகாட்டுதல் வழங்குவதற்கும், சிறந்த கல்வியை தேர்ந்தெடுத்து தொடர்வதற்கும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.நடப்பாண்டில் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ், கூடுதலாக சிறப்பு கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முழுமையாக பள்ளிப்படிப்பை முடிப்பதற்கும், உயர்கல்வியில் அவர்களின் சேர்க்கையை உறுதிப்படுத்துவதும் இக்குழுவின் நோக்கமாக செயல்படுத்தப்படுகிறது.புதிய கல்வியாண்டு, 2024 - 25 துவங்கியுள்ளது. ஜூன், ஜூலை மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புக்கன மறுதேர்வு நடக்கிறது. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.உடுமலை கோட்டத்துக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், சிறப்பு குழுவினர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடி வருகின்றனர்.இந்த சிறப்பு குழுவில், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் மாணவர்களின் மொபைல் எண்களை பெற்றுக்கொண்டு, அலுவலர்கள் அவர்களை தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அலுவலர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:மாணவர்கள் தேர்வு எழுதாமல் விட்டதன் காரணம், எந்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை, உயர்கல்வியில் சேராமல் இருப்பது குறித்து மாணவர்களிடம் விளக்கம் கேட்கப்படுகிறது. மாணவர்களின் பெற்றோரிடமும், தொடர்ந்து ஆசிரியர்கள் பேசுகின்றனர்.மறுதேர்வில் விண்ணப்பிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. உயர்கல்வியில் சேர்வதற்கு தற்போதுதான் கல்லுாரிகளில் கலந்தாய்வு நடக்கிறது. அவை முடிந்தபின்தான், சேராமல் இருக்கும் மாணவர்கள் குறித்து அறிய முடியும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்