நீட் தேர்வுக்கு எதிர்ப்பு; அமளி: பார்லி., ஒத்திவைப்பு
புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு துவங்கும்.லோக்சபாநீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. லோக்சபாவில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசும் போது, மாணவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சுலேவும், நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வலியுறுத்தினார்.ஆனால் இதனை ஏற்க சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்துவிட்டார். இதனையடுத்து அமளி ஏற்பட்டதையடுத்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கூடியபோதும் அவையில் அமளி நிலவியது. இதனையடுத்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.ராஜ்யசபாநீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கார்கே வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர்.