உள்ளூர் செய்திகள்

இந்திய ராணுவம் மற்றும் என்.சி.சி., முக்கியத்துவம் குறித்த சொற்பொழிவு

புதுச்சேரி : திண்டிவனம் தட்சசீலா பல்கலையில் இந்திய ராணுவம் மற்றும் என்.சி.சி., முக்கியத்துவம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நடந்தது.திண்டிவனம் தட்சசீலா பல்கலையில் மாணவர்களின் பாடத் திட்டங்களுக்கு ஏற்ப துறை சார்பு சிறப்பு சொற்பொழிவுகளை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தட்சசீலா பல்கலையின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் துறை சார்பில் இந்திய ராணுவம், என்.சி.சி.,யின் முக்கியத்துவம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நடந்தது.நிகழ்ச்சியில் அதிவிசிட்ட சேவா, யுத்த சேவா பதக்கம் பெற்ற லெப்டினண்ட் ஜெனரல் சஞ்சீவ் சவுஹான் பங்கேற்று, என்.சி.சி.,யின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லுாரி அளவில் என்.சி.சி.யில் சேரும் மாணவர்களுக்கு, இறுதியாக வழங்கப்படும் சி சான்றிதழ்களை கொண்டு ராணுவ வாய்ப்புகளைப் பெற முடியும்' என்றார். பல்கலை சார்பில் உத்வேகம் தரும் உலகளாவிய கல்வி, சிறந்த சமூகம் மற்றும் சமூக முன் முயற்சிக்கான விருது ரூபா சவுஹானுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பல்கலை வேந்தர் தனசேகரன், இணைவேந்தர் மருத்துவர் நிலா பிரியதர்ஹினி, இணைவேந்தர் ரங்கநாதன், துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சர், பதிவாளர் செந்தில், இணை பதிவாளர் ராமலிங்கம், புலமுதன்மையர்கள் தீபா, சுபலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் கலைச்செல்வி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கல்வி விவகாரங்களின் முதன்மையர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்