உள்ளூர் செய்திகள்

நான் படித்த ஸ்டேன்ஸ் பள்ளிக்கு வி.ஐ.பி.,யாக வருவது பெருமை

கோவை: படித்த பள்ளிக்கே வி.ஐ.பி.,யாக வருவதை பெருமையாக இருக்கிறது என்று எம்.பி., ராஜ்குமார் கூறினார்.கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப்பள்ளியின், 162வது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் பவ்லர் தலைமை தாங்கினார். முதல்வர் ெஷலின் வினோதினி வரவேற்றார்.நிகழ்ச்சியில், கோவை லோக்சபா தொகுதி எம்.பி., ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:நான் படித்த பள்ளிக்கே வி.ஐ.பி., ஆக வருவது பெருமையாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் நன்றாக ஆங்கிலம் பேசுவதற்கு, இங்கு படித்தது உதவியாக இருக்கிறது. நான் எம்.பி.,ஆனதை, கடவுள் கொடுத்த வாய்ப்பாக நினைக்கிறேன். படித்து முடித்து மாணவர்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.அதனால், மாணவர்கள் படிக்கும் போது அதிக திறன்களையும், சவால்களை சந்திக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, ராஜ்குமார் பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட ரோட்டரி கவர்னர், வக்கீல் சுந்தரவடிவேலு வாழ்த்துரை வழங்கினார். எம்.பி.,ராஜ்குமாருக்கு பள்ளி சார்பில், எக்சலன்ட் அவார்டு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனை மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து, மாணவ-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில், துணை முதல்வர் திவாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்