உள்ளூர் செய்திகள்

வரவேற்பும், கவலையும் கலந்த தேசிய கல்வி கொள்கை: சசிதரூர்

கோவை: கோவை எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்ட் பள்ளியில், மூன்று நாட்களாக நடந்து வந்த, உருமாறும் இந்தியாஎனும் மாநாடு, நேற்று நிறைவு பெற்றது. காங்., எம்.பி., சசி தரூர், காணொளி வாயிலாக மாணவர்கள், ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது அவர் பேசியதாவது:உலகத்தின் கண்ணாடி பிம்பம்தான் புத்தகங்கள். அதை தொடர்ந்து படிக்கும்போது, புதிய சிந்தனைகள் மலரும். எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். வார்த்தைகள் மாறும்போது மிகப்பெரிய மாற்றங்களும் ஏற்படும்; சில சமயங்களில் அர்த்தமே மாறிவிடும். எனவே, தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்துகளை, பொதுவெளியில் பயன்படுத்துவதில் கவனம் தேவை. தவறுகளை ஒப்புக்கொள்வதுடன், மன்னிக்கும் மனப்பான்மையும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேசிய கல்வி கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் வரவேற்பு பெற்றுள்ளன. சில அம்சங்கள் கவலைக்குரியதாக உள்ளன. சில பள்ளிகளில் விளையாட்டு பயிற்சிக்கு மைதானம் கூட இல்லை.பிரதமர் மோடி, இசை வகுப்புக்கும், கணித பாடத்துக்கும் முக்கியத்துவம் தருமாறு தெரிவித்துள்ளார். ஆனால், இசைக்கான உபகரணங்கள், ஆசிரியர்கள் வசதி இல்லை. எனவே, இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு, மத்திய பட்ஜெட்டில் நிதியை அதிகரிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்