உள்ளூர் செய்திகள்

கனடா அரசின் வெளியேற்ற முடிவு; மாணவ அமைப்பினர் போராட்டம்

ஒட்டாவா: வேலை மற்றும் உயர்படிப்பு நிமித்தமாக வந்துள்ள வெளிநாட்டவர்களை விரைவில் வெளியேற்ற கனடா அரசு திட்டமிட்டுள்ளதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் அங்கு இந்தியர்கள் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள் கனடாவில், இருப்பதால் உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பேர் கனடாவுக்கு செல்கின்றனர். இதில் இந்தியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் வருவதால் தங்கள் நாட்டினருக்கு பாதிப்பு ஏற்படுவதாக அந்த நாட்டு அரசு கருதுகிறது. இதனால் இதனை கட்டுப்படுத்த புதிய திட்டம் வகுத்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ அறிவித்து இருந்தார்.இந்த அறிவிப்புக்கு கனடா முழுவதும் உள்ள வெளிநாட்டு பணியாளர்கள், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பிராம்பட்டனில் உள்ள குயின்தெரு, ஒன்டாரியோ, பிரின்ஸ் எட்வர்டு ஐஸ்லாண்ட், மனிடோபா உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.நாடுகடத்தலை நிறுத்து, வேலை செய்யவிடு, தங்கவிடு, புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குவதை நிறுத்து, இனவெறியை நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மாணவர்கள் போராடினர்.அகதிகள் ஆகும் நிலைகனடா அரசின் முடிவால் 1.5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என மாணவ அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பலர் அகதிகள் ஆகும் நிலை உருவாகி இருப்பதாகவும், பலர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் இந்தியர்கள் பலர் கனடா அரசின் முடிவால் இன்னும் பலர் பாதிப்புக்கு உள்ளாவர் என மாணவர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்