உள்ளூர் செய்திகள்

கணிதப்பூங்கா பணி மேயர் நேரில் ஆய்வு

கோவை: கோவை வ.உ.சி., பூங்கா வளாகத்தில், புதிதாக கட்டப்படும் கணிதப்பூங்கா பணிகளை, மேயர் ரங்கநாயகி நேற்று ஆய்வு செய்தார்.கோவை மாநகராட்சி, 83வது வார்டில் வ.உ.சி., உயிரியல் பூங்கா, முதியோர் பூங்கா அமைந்திருக்கிறது. வ.உ.சி., பூங்காவுக்கு எதிரே உணவு வீதி கட்டப்பட்டிருக்கிறது. பூங்கா வளாகத்தின் மற்றொரு பகுதியில், நமக்கு நாமே திட்டத்தில், ரூ.54 லட்சத்தில் கணிதப்பூங்கா அமைக்கப்படுகிறது.இப்பணிகளை மேயர் ரங்கநாயகி, மத்திய மண்டல தலைவர் மீனா ஆகியோர் கூட்டாக நேற்று ஆய்வு செய்தனர்.பூங்கா வளாகத்தை சுத்தமாக பராமரிக்க, மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின், ராம்நகர் ஆர்.ஆர்.சாமி லைன் பகுதியில், பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணியை பார்வையிட்டனர்.அப்போது, நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, கால்நடை டாக்டர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், கவுன்சிலர் சுமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்