உள்ளூர் செய்திகள்

வனத்தில் துாய்மைப் பணி; பள்ளி மாணவியர் சேவை

பொள்ளாச்சி : ஆழியாறு சோதனைச்சாவடி முதல், கவியருவி இடையிலான சாலையோரம், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.ஆனைமலை புலிகள் காப்பகம், ஆழியாறு அருகேயுள்ள வனப்பகுதியில், பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் இயற்கையை நேசி அறக்கட்டளை சார்பில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.தலைமையாசிரியர் தேன்மொழி மற்றும் திட்ட அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தினர். அவ்வகையில், 25க்கும் மேற்பட்ட மாணவியர் ஒன்றிணைந்து, ஆழியாறு சோதனைச் சாவடி முதல் கவியருவி வரையிலான சாலையோரத்தில், திறந்தவெளியில் காணப்பட்ட உடைந்த கண்ணாடித் துண்டுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் ஆகியவற்றை சேகரித்தனர்.அதன்பின், அவற்றை அப்புறப்படுத்தும் வகையில் வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர். மாணவியருக்கு வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது.பாரஸ்டர் சிவக்குமார், கார்டு கணேஷ், ஆனந்தராஜ், மற்றும் இயற்கையை நேசி அறக்கட்டளை நிர்வாகிகள் கமலக்கண்ணன், செல்வமணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர். ஆசிரியர்கள் மோகனா, செம்மலர் ஆகியோர் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்