உள்ளூர் செய்திகள்

பாதைமாறும் பள்ளி மாணவர்களை கண்காணித்து மீட்க வேண்டும்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பாதை மாறும் பள்ளி மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.விழுப்புரம் அருகே கோலியனூர், வளவனூர் பகுதி அரசு பள்ளியில், ஏராளமான சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமப்புற பெற்றோர், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வேலைக்குச் செல்கின்றனர்.இந்நிலையில், உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் சில மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் இருப்பதால், படிப்பதில் கவனம் சிதறுவதாக அதிருப்தி எழுந்துள்ளது. சில மாணவர்கள், தவறான பழக்கத்தால், பள்ளிக்கு வெளியே குட்கா போன்றவற்றை பயன்படுத்துவதாகவும், அதனால், பள்ளிக்கு வராமல் ஏமாற்றுகின்றனர்.சிலர் காதல் விவகாரம், சாதிய பிரச்னைகளை ஏற்படுத்தி, தகராறில் ஈடுபடுவதும் நடக்கிறதாம். இதனை ஆசிரியர்கள் தட்டிக்கேட்டால், மாணவர்கள் மதிப்பதில்லை என்றும், சிலர் மொபைல்போனை எடுத்து வருவதால் படிப்பில் கவனம் சிதறுவதாகவும் கூறப்படுகிறது.இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், கடைசி நேரத்தில் அவதிப்படும் நிலை உள்ளதால், பாதை தவறும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி, கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம்: விழுப்புரம் அருகே பாதை மாறும் பள்ளி மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.விழுப்புரம் அருகே கோலியனூர், வளவனூர் பகுதி அரசு பள்ளியில், ஏராளமான சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமப்புற பெற்றோர், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வேலைக்குச் செல்கின்றனர்.இந்நிலையில், உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் சில மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் இருப்பதால், படிப்பதில் கவனம் சிதறுவதாக அதிருப்தி எழுந்துள்ளது. சில மாணவர்கள், தவறான பழக்கத்தால், பள்ளிக்கு வெளியே குட்கா போன்றவற்றை பயன்படுத்துவதாகவும், அதனால், பள்ளிக்கு வராமல் ஏமாற்றுகின்றனர்.சிலர் காதல் விவகாரம், சாதிய பிரச்னைகளை ஏற்படுத்தி, தகராறில் ஈடுபடுவதும் நடக்கிறதாம். இதனை ஆசிரியர்கள் தட்டிக்கேட்டால், மாணவர்கள் மதிப்பதில்லை என்றும், சிலர் மொபைல்போனை எடுத்து வருவதால் படிப்பில் கவனம் சிதறுவதாகவும் கூறப்படுகிறது.இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், கடைசி நேரத்தில் அவதிப்படும் நிலை உள்ளதால், பாதை தவறும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி, கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்