உள்ளூர் செய்திகள்

தெரசா பல்கலை பட்டமளிப்பு விழா புறக்கணித்த அமைச்சர் செழியன்

கொடைக்கானல்: கொடைக்கானல் தெரசா பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கினார். விழாவை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார்.கொடைக்கானல் தெரசா பல்கலை பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் கலா வரவேற்றார். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலை துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் பங்கேற்றார்.சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் பேசுகையில், இந்தியாவில் முன்னிலையில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலையின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற வகையில், பிரதமர் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.அதேவேளையில் தமிழகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற நிலைப்பாடு பேச்சு அளவில் மட்டுமே உள்ளது. மத்திய அரசு, இவ்விஷயத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. நிதி, வெளியுறவுக் கொள்கையில் ஏராளமான பெண்கள் தங்களின் பங்களிப்புகளை வழங்கக்கூடிய சக்திகளாக திகழ்கின்றனர். இதற்கு உதாரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை கூறலாம் என்றார்.முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் தமிழக கவர்னருக்கும் இடையே இணக்கமில்லாத நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் பொன்முடி வேறு துறைக்கு மாற்றப்பட்டார். கவர்னருடன் இணக்கமாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், இந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி பங்கேற்ற நிலையில் புறக்கணித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்