உள்ளூர் செய்திகள்

மாநில அறிவியல் கண்காட்சி; வென்ற மாணவிக்கு பாராட்டு

உடுமலை: மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், வெற்றி பெற்ற மாணவிக்கு, ஜி.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவை மற்றும் அறிவியல் மனிதநேய துறை, பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது.இதில், உடுமலை ஜி.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநேத்ரா பங்கேற்று, முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு, ஐந்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவிக்கு, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்