உள்ளூர் செய்திகள்

கர்நாடக தமிழ் பள்ளிகள் நிலை; தகவல் கேட்கும் எஸ்.டி.குமார்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அனைத்து தமிழ் பள்ளி, கல்லுாரிகள் குறித்த தகவல்கள் சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய் மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் அழைப்பு விடுத்துள்ளார்.நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகாவில் உள்ள அனைத்து தமிழ் பள்ளி, கல்லுாரிகள் குறித்த தகவல்கள் சேகரித்து உரிய நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். பள்ளியின் படங்கள், எந்த பகுதியில் உள்ளது, தற்போது உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, தமிழ் ஆசிரியர்கள் இருப்பு மற்றும் பற்றாக்குறை; தமிழ்ப் பள்ளிகளின் கட்டடங்களின் தற்போதைய நிலை போன்ற பல தகவல்களை உடனடியாக சேகரித்து அனுப்புமாறு கர்நாடகாவில் உள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகள், தமிழர் நலம் சார்ந்த அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், குறிப்பாக தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்