உள்ளூர் செய்திகள்

பணிக்கு செல்லும் மாணவர்கள்; ஆசிரியர்களால் கண்காணிப்பு

பொள்ளாச்சி: பொருளாதாரத்தில் பினதங்கிய அரசு பள்ளி மாணவர்கள், விடுமுறை நாட்களில் பணிக்கு சென்றாலும், அவர்கள் பள்ளிக்கு செல்வதும் உறுதி செய்யப்படுகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட தலைமையாசிரியர்கள் மட்டும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.அதேநேரம், பொருளாதாரத்தில் பின் தங்கிய அரசு பள்ளி மாணவர்கள் சிலர், விடுமுறை நாட்களில் கட்டுமானம், பெயின்டிங் உள்ளிட்ட பணிகளுக்கு செல்கின்றனர்.இது குறித்து, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:தொடர் விடுமுறையின்போது, பெற்றோர் பலரும், தங்களது குழந்தைகளை, சொந்த ஊர் மற்றும் உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதை பெரிதும் விரும்புவர். ஆனால், தற்போது, அத்தகைய நிலை மாறுபட்டுள்ளது.பெரும்பாலான குழந்தைகள் சொந்த ஊர்களுக்கு செல்வதை விட, சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை அதிகம் விரும்புகின்றனர். பெற்றோர்களும் ஓரிரு நாட்கள், சுற்றுலா சென்று விட்டு, மற்ற விடுமுறை நாட்களில் வேறு ஏதேனும் கல்வி அல்லது விளையாட்டு சார்ந்த சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர்.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஏதேனும் ஒரு பணிக்கு சென்று திரும்புகின்றனர். அவர்கள், ஆசிரியர்கள் வாயிலாக கண்காணிக்கப்பட்டு, பள்ளிக்கு வருவதும் உறுதி செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்