உள்ளூர் செய்திகள்

விசாரணையை திசை திருப்புகின்றனர்: அமைச்சர்கள் மீது அ.தி.மு.க., புகார்

சென்னை : அண்ணா பல்கலை சம்பவ விசாரணையை உயர் கல்வித் துறை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் திசைத் திருப்புவதாக அ.தி.மு.க., புகார் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகன் அறிக்கை:உயர் கல்வித்துறை அமைச்சரும், மற்ற பெண் அமைச்சர்கள் உள்ளிட்டோரும், பழனிசாமியின் நேரடியான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை திசை திருப்புகின்றனர்.தகிடுதத்தம்பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களில் ஒரு சிலர் புகார் கொடுப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அந்த அளவுக்கு கொடூர செயல்களில் ஆளும் கட்சியை சேர்ந்த சிலரே ஈடுபடுகின்றனர்.அவர்களை காப்பாற்ற ஆட்சியாளர்கள் பல்வேறு தகிடுதத்தங்களை செய்வதும் நடக்கிறது. இதை மெத்த படித்த அமைச்சர் கோவி.செழியன் அளிக்கும் பதில்களில் இருந்தே, மக்கள் நன்கு புரிந்து கொள்வர்.ஆளும் கட்சியினரின் அராஜகத்தால் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களோ, மாணவியரோ, பெற்றோரோ போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க முடியாத நிலை நிலவுவதை, தமிழக மக்கள் நன்கறிவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அ.தி.மு.க., கடிதம்இதற்கிடையில், அண்ணா பல்கலைக் கழக பாலியல் விவகாரத்தையொட்டி சட்டசபையில் விவாதிக்க வேண்டியுள்ளது. அதனால், உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என அ.தி.மு.க., சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்