உள்ளூர் செய்திகள்

கல்லுாரி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரிக்கு பின்புறமாக, சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, அங்கு சென்ற போலீசார், கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, வளர்புரம் கிராமத்தை சேர்ந்த விஜய், 30, மண்ணுார் கிராமத்தை சேர்ந்த சஞ்சய், 18, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 35,000 ரூபாய் மதிப்புள்ள, 1.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்