டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆசிரியருக்கு அழைப்பு
பாலக்காடு: டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள, மூணாறு பொறியியல் கல்லூரி உடல்கல்வி ஆசிரியருக்கு சிறப்பு அழைப்பு வந்துள்ளது.கேரளா மாநிலம், பாலக்காடு பட்டிக்கரை நொச்சுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ், 42. மூணாறு பொறியியல் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராகவும், என்.எஸ்.எஸ்., அலுவலராகவும் பணியாற்றுகிறார்.இவரின் தலைமையில் தேசிய சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து, பஸ் வசதி இல்லாத இடமலையார்குடியில் உள்ள பரப்பையார் என்ற மலைகிராமத்துக்கு, தேவையான கட்டுமான பொருட்களை, 14 கி.மீ., தொலைவுக்கு நடந்தே கொண்டு சென்றனர். அப்பகுதி மக்களுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்துள்ளனர்.இந்த செயல் குறித்து, கடந்த, 2016 அக்., 30ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பாராட்டினார். இந்நிலையில், வரும் 26ம் தேதி டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கு, அனிஷ்க்கு சிறப்பு அழைப்பு வந்துள்ளது.