உள்ளூர் செய்திகள்

புத்தக விழா மேடை நிகழ்ச்சிகள்; தொடர்கிறது கண்காணிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், திருப்பூர் வேலன் ஓட்டல் வளாகத்தில், புத்தக திருவிழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தினமும் மாலை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.கடந்த, 24ம் தேதி மேடை நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதால், இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது; போலீசார் சாமதானம் செய்தனர்.பா.ஜ., - ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். கலெக்டரும், புத்தக கண்காட்சி குழுவை அழைத்து பேசி, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி, இலக்கியம், புத்தகம், தமிழ்மொழியின் சிறப்பு போன்ற கண்காட்சி தொடர்பான விஷயங்களை மட்டும் பேச வேண்டும். மற்ற விஷயங்களை பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.திருப்பூர் ஆர்.டி.ஓ., மற்றும் மாவட்ட நுாலக அலுவலர் ஆகியோர், மேடை நிகழ்ச்சிகளை தினமும் கண்காணித்து வரவும் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, ஆர்.டி.ஓ., மற்றும் நுாலக அலுவலர்கள், மேடை நிகழ்ச்சிகளை, தினமும் கண்காணித்து வருகின்றனர். நேற்று பேசிய முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலச்சந்திரன், எதையெல்லாம் பேசக்கூடாது என்று முன்கூட்டியே கூறிவிட்டனர் என்று கூறி, தனது பேச்சை துவக்கினார்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், கலெக்டர் உத்தரவுப்படி, திருப்பூர் புத்தக திருவிழா மேடை நிகழ்ச்சிகள் தினமும் கண்காணிக்கப்படுகிறது. சிறப்பு சொற்பொழிவாளரிடம், சர்ச்சைக்குரிய விஷயங்களை பேச வேண்டாம் என்று முன்கூட்டியே அறிவுறுத்தப்படுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்