பல்கலையில் பெர்த் டே பார்ட்டி மாணவர்கள் மோதல்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை வளாகத்தில் யு.ஜி., மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடக்கிறது.இப்பல்கலையில் இளங்கலை சைக்காலஜி பிரிவு மாணவர்கள், ஒரு மாணவியின் பிறந்த நாளை தமிழ்த்துறை முன் உள்ள கேன்டீன் முன் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது ஒருவருக்கு ஒருவர் கேக் கிரீம்மை முகத்தில் தடவி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.அப்போது சிலர் வேறு துறை மாணவர்கள் முகத்தில் கிரீம் தடவினர். இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் கேன்டீன் சேர்களை வீசி மோதலில் ஈடுபட்டனர். பல்கலை காவலர்கள், ஊழியர்கள் சமசரம் செய்தனர். பல்கலை வளாகத்திற்குள் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது நிர்வாக செயல்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது என பேராசிரியர்கள் குற்றம்சாட்டினர்.