ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்து இளைஞர்கள் அச்சம்; கருத்துக்கணிப்பில் தகவல்
புதுடில்லி: இந்தியாவில் வேலைவாய்ப்புகளில் மனிதர்களுக்கு பதிலாக ஏ.ஐ., பூர்த்தி செய்து விடும் என்ற அச்ச உணர்வு இளைஞர்களிடையே எழுந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.இண்டியா டுடே மற்றும் சிவோட்டர் நிறுனம் இணைந்து இந்தியர்களிடையே அதிக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. அந்த வகையில், வேலைவாய்ப்புகளில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது.அதில், வருங்காலத்தில் வேலைவாய்ப்புகளை ஏ.ஐ., பூர்த்தி செய்து விடும் என்று 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில், மனிதர்களின் வேலைவாய்ப்புகளை ஏ.ஐ.,யால் பூர்த்தி செய்து விட முடியாது என்று 30 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.இதன்மூலம், இந்தியாவில் ஏ.ஐ.,யினால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்ச உணர்வு இளைஞர்களிடையே நிலவி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.