கற்பகம் மருத்துவ கல்லுாரியில் முதலாவது பட்டமளிப்பு விழா
கோவை: கற்பகம் மருத்துவக் கல்லுாரி அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின், முதலாவது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார். பெங்களூரு ராமையா பல்கலை இணை வேந்தர் டாக்டர் ஓம் பிரகாஷ் கர்பாந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.விழாவில், 80 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.முதல்வர் டாக்டர் நிர்மலா,கல்லுாரி டீன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.